இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2021-ல் பிரதமர் ஆற்றிய உரை
August 11th, 06:52 pm
இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தொழில்துறை முன்னோடிகள் மற்றும் சிஐஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு.டி.வி.நரேந்திரன், தொழில் நிறுவனங்களின் தலைவர்களே, வெளிநாட்டுத் தூதர்களே, பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் தூதர்களே, தாய்மார்களே, சகோதரர்களே!இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் 2021-இல் பிரதமர் உரையாற்றினார்
August 11th, 04:30 pm
கூட்டத்தில் பேசிய பிரதமர், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்திற்கு இடையே, 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். புதிய தீர்வுகளுக்கும், இந்திய தொழில்துறையினரின் புதிய இலக்குகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார் அவர். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றி அடையச்செய்வது இந்திய தொழில்துறையின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின்போது தொழில் துறையினரின் நெகிழ்வுத் தன்மையை பிரதமர் பாராட்டினார்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
July 16th, 04:05 pm
எனது அமைச்சரவை தோழரும், காந்திநகர் எம்பியுமான திரு அமித் ஷா அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் நிதின் பாய் அவர்களே, ரயில்வே இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, எனது அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 16th, 04:04 pm
குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.