ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காக அவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

July 05th, 07:17 pm

பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காகவும் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகளில் பங்களித்ததற்காகவும் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

June 14th, 04:00 pm

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.06.2024) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்துத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

பிரதமர் திரு மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 05th, 07:53 pm

இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்

March 12th, 08:40 pm

இருதரப்பு விரிவான உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, பந்தோபஸ்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் 2030 செயல் திட்டத்தின் கீழ், ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்

November 03rd, 11:35 pm

பிரதமர் சுனக் தமது பதவிக்காலத்தின் ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காகப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமருடன் பிரதமரின் சந்திப்பு

September 09th, 05:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக் உடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். புது தில்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 2022 அக்டோபரில் பிரதமரான பிறகு, பிரதமர் சுனக் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை.

ஜி-20 மாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்

September 08th, 08:13 pm

நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமருடன் சந்திப்பு

May 21st, 09:42 am

2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் உரையாடினார்

April 13th, 09:16 pm

இந்தியா-இங்கிலாந்து திட்ட வரைபடம் 2030-ன் ஒரு பகுதியாகப் பல இருதரப்பு விசயங்களில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். அண்மைக்கால உயர்நிலைப் பரிமாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகள் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கையை முன்கூட்டியே முடிப்பதற்கான அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Prime Minister's meeting with the Prime Minister of the United Kingdom on the sidelines of G-20 Summit in Bali

November 16th, 03:54 pm

Prime Minister Narendra Modi met Rt. Hon. Rishi Sunak, Prime Minister of the United Kingdom on the sidelines of the G-20 Summit in Bali. The two leaders expressed satisfaction at the state of the wide-ranging India-UK Comprehensive Strategic Partnership and progress on the Roadmap 2030 for Future Relations.

PM speaks to Rishi Sunak on assuming charge as UK PM

October 27th, 09:25 pm

The Prime Minister, Shri Narendra Modi has spoken to Rishi Sunak and Congratulated him on assuming charge as UK Prime Minister.

இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 24th, 09:15 pm

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.