சுகம்யா பாரத் திட்டம் தொடங்கப்பட்டதன் 9-ம் ஆண்டு நிறைவை பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்

December 03rd, 04:22 pm

சுகம்யா பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொண்டாடினார். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது, சமத்துவம் ஆகியவற்றை மேலும் அதிகரிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் மன உறுதி மற்றும் சாதனைகளைப் பாராட்டிய திரு மோடி, இது நம் அனைவரையும் பெருமைப்பட வைத்தது என்று குறிப்பிட்டார்.