செயிண்ட் லூசியா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்
November 21st, 10:13 am
இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று செயிண்ட் லூசியா பிரதமர் திரு. பிலிப் ஜே. பியருடன் பயனுள்ள விவாதங்களை நடத்தினார்.ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 09:37 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. கேஸ்டன் பிரவுனை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாடு
November 20th, 08:38 pm
ரியோ டி ஜெனிரோவில் நவம்பர் 19 அன்று ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இரண்டாவது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர். முதலாவது வருடாந்திர உச்சிமாநாடு கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி புதுதில்லியில் பிரதமர் அல்பானீஸின் இந்திய வருகையின் போது நடைபெற்றது.சிலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:36 pm
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சிலி குடியரசின் அதிபர் திரு. கேப்ரியல் போரிக் ஃபோன்ட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று சந்தித்தார். இதுதான் அவர்களின் முதல் சந்திப்பாகும்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி இடைமாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 20th, 01:40 am
இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி20 அமர்வில் பிரதமரின் உரை
November 20th, 01:34 am
நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றம் குறித்த ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்காக உயர்த்தவும், எரிசக்தி சிக்கன விகிதத்தை இரட்டிப்பாக்கவும் இந்தக் குழு புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின் போது தீர்மானித்திருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலையான வளர்ச்சி முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரேசிலின் முடிவை அவர் வரவேற்றார்.இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு
November 19th, 11:22 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 06:08 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.நார்வே பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 05:44 am
இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் – வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (இந்தியா-EFTA-TEPA) கையெழுத்தானது என்பது இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், நார்வே உள்ளிட்ட இஎஃப்டிஏ நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை
October 25th, 08:28 pm
புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
October 25th, 01:00 pm
இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் உங்களையும், உங்கள் தூதுக்குழுவினரையும் அன்பாக வரவேற்கிறேன்.ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை
October 25th, 11:20 am
இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.Roadmap For U.S.-India Initiative to Build Safe and Secure Global Clean Energy Supply Chains
September 22nd, 11:44 am
The United States and India are deepening their collaboration on clean energy, focusing on expanding manufacturing capacity for solar, wind, battery, and energy-efficient technologies. They plan to unlock $1 billion in multilateral finance, mobilize additional funds, and work on pilot projects in Africa. This partnership aims to boost both countries' clean energy supply chains and set a global example for sustainable economic development.செப்டம்பர் 15-17 தேதிகளில் ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசாவுக்கு பிரதமர் பயணம்
September 14th, 09:53 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 செப்டம்பர் 15-17 தேதிகளில் ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி
September 05th, 11:00 am
வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்கள். வேதங்களில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று சூரியனைப் பற்றியது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் பாராயணம் செய்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் சூரியனுக்கு தங்கள் வழிகளில் மரியாதை அளிக்கின்றனர். மதிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சூரியனுடன் தொடர்புடைய திருவிழாக்களும் உள்ளன. இந்த சர்வதேச சூரிய திருவிழா சூரியனின் தாக்கத்தை கொண்டாட உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறது. இது ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க உதவும் ஒரு திருவிழா.வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு பிராந்தியத்தில் மாநில அரசுகளின் சமமான பங்கேற்புக்கான மத்திய நிதி உதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 28th, 05:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு நிதி உதவியை (CFA) மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.