சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
October 15th, 02:23 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) டிசம்பர் 12 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
December 11th, 04:27 pm
ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.டிசம்பர் 3-ந் தேதி பிரதமர் இன்பினிட்டி அமைப்பை தொடங்கி வைக்கிறார்
November 30th, 11:26 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்டெக் தொடர்பான இன்பினிட்டி அமைப்பை டிசம்பர் 3-ந் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
October 09th, 02:26 pm
எண்ணெய் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உயிரி எரிசக்தியின் தேவையை எடுத்துரைத்து, எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கிழக்கு இந்தியாவில் உள்ள எரியாற்றலை பெறுவது குறித்தும் வலியுறுத்தினார். இந்தியா சுத்தமான ஆற்றல் மிக்க எரிசக்தியை நோக்கி முன்னேறி வருகிறது என்றும், அதன் பலன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.