ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்
April 30th, 11:32 am
இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.