'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி

September 29th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

February 14th, 02:45 pm

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்த அயர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

PM addresses International Energy Agency’s Ministerial Meeting

February 14th, 02:39 pm

Addressing the Ministerial Meeting of the International Energy Agency, PM Modi said, India is home to 17% of the global population. We are running some of the world’s largest energy access initiatives. Yet, our carbon emissions account for only 4% of the global total. However, we are firmly committed to combating climate change. Our Mission LiFE focuses on pro-planet lifestyle choices for a collective impact. Reduce, Reuse, and Recycle’ is a part of India’s traditional way of life. India’s G20 Presidency also saw significant action on this front, he added.

பெங்களூரைச் சேர்ந்த இதயநோய் நிபுணர், அவரது மகன் ஆகியோரின் மறுபயன்பாட்டு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்

March 07th, 02:15 pm

கழிவிலிருந்து செல்வம், மறுபயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பெங்களூரைச் சேர்ந்த மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோரின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

நகர்ப்புறத் திட்டமிடல் மேம்பாடு மற்றும் தூய்மை என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 10:20 am

நகர்ப்புற மேம்பாடு என்ற முக்கியமான தலைப்பிலான பட்ஜெட் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 01st, 10:00 am

நகர்ப்புறத் திட்டமிடலில் கவனம் செலுத்துதலுடன் கூடிய நகர்ப்புற மேம்பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட்-2023-ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் திறம்பட அமல்படுத்துவது குறித்து அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளில் இது 6-வது கருத்தரங்கமாகும்.

நீர்வளத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் முக்கிய அம்சங்கள்

January 05th, 09:55 am

நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில், அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும்.

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் உரையாற்றினார்

January 05th, 09:45 am

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்

November 17th, 03:36 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.

Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE

October 20th, 11:01 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat

October 20th, 11:00 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

புதுதில்லி, அகமதாபாத் ரயில் நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை மறுசீரமைக்க அமைச்சரவை ஒப்புதல்

September 28th, 04:58 pm

புதுதில்லி, அகமதாபாத் ரயில்நிலையங்கள் மற்றும் மும்பை ரயில் நிலையத்தின் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தை சுமார் ரூ. 10,000 கோடி மதிப்பில் மறுசீரமைக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வே பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

India is a rapidly developing economy and continuously strengthening its ecology: PM Modi

September 23rd, 04:26 pm

PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.

PM inaugurates the National Conference of Environment Ministers of all States in Ekta Nagar, Gujarat

September 23rd, 09:59 am

PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.

செப்டம்பர் 8 அன்று ‘கடமைப் பாதையை’ தொடங்கிவைக்கும் பிரதமர் இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையை திறந்துவைக்கிறார்

September 07th, 01:49 pm

2022 செப்டம்பர் 8 அன்று இரவு 7 மணிக்கு ‘கடமைப் பாதையை’ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். அதிகாரத்தின் குறியீடாக இருந்த முந்தைய ராஜபாதை கடமைப்பாதையாக மாறுவது பொதுமக்களின் உடைமை மற்றும் அதிகாரத்திற்கான உதாரணத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் போது இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையையும் பிரதமர் திறந்துவைப்பார். அமிர்தகாலத்தில் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் 2-வது உறுதிமொழியான ‘காலனிய மனநிலையின் அனைத்து அடையாளத்தையும் அகற்றுதல்’ என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

June 26th, 11:30 am

நண்பர்களே, இந்த இளைஞர்களின் மனதிலே தான், இன்றிலிருந்து சில ஆண்டுகள் முன்பாக விண்வெளித்துறை பற்றிய ஒரு பிம்பமானது, ஏதோ ஒரு ரகசியத் திட்டம் போல இருந்தது; ஆனால் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட விண்வெளிச் சீர்திருத்தங்கள் காரணமாக, இதே இளைஞர்கள் இப்போது தங்களுடைய செயற்கைக்கோள்களையே ஏவுகிறார்கள். தேசத்தின் இளைஞர்கள் விண்ணைத் தொட ஆர்வமாக இருக்கும் போது, எப்படி நமது தேசம் பின் தங்கியிருக்க முடியும் சொல்லுங்கள் ?

லைஃப் இயக்கத்தின் துவக்கம் விழாவில் பிரதமரின் உரை

June 05th, 07:42 pm

இன்றைய தருணமும், தேதியும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கத்தை நாம் துவக்குகிறோம். “ஒரே ஒரு பூமி” என்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் முழக்கமாகும். “இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வு” என்பது அதன் மையப் பொருள்.

PM launches global initiative ‘Lifestyle for the Environment- LiFE Movement’

June 05th, 07:41 pm

Prime Minister Narendra Modi launched a global initiative ‘Lifestyle for the Environment - LiFE Movement’. He said that the vision of LiFE was to live a lifestyle in tune with our planet and which does not harm it.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 06th, 02:08 pm

ஜிடோ கனெக்ட் உச்சி மாநாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!