அமுல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 11:30 am
குஜராத் ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சகா திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, அமுல் நிறுவனத்தின் தலைவர் திரு ஷமல் பாய் அவர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
February 22nd, 10:44 am
அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பகவான் ஶ்ரீ தேவ்நாராயண் 1111-வது அவதார மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 28th, 03:50 pm
நண்பர்களே, இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை. பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் யாத்ரீகராக வந்துள்ளேன். தேவ்நாராயண் ஜி மற்றும் ‘ஜனதா ஜனார்தன்’ இருவரையும் தரிசனம் செய்ததன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இங்கு வந்துள்ள மற்ற யாத்ரீகர்களைப் போலவே, தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்காகவும் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தை நானும் கோருகிறேன்.ராஜஸ்தானின் பில்வாராவில் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’விழாவில் பிரதமர் உரை
January 28th, 11:30 am
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் இன்று நடைபெற்ற பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’ விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மந்திர் தரிசனம் மற்றும் பரிக்கிரமா வழிபாடுகளைச் செய்த பிரதமர், வேப்ப மரக்கன்றுகளையும் நட்டார். யாகசாலையில் நடைபெறும் விஷ்ணு மகாயக்ஞத்தில் பூர்ணாஹுதி வழிபாட்டையும் பிரதமர் செய்தார். பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி ராஜஸ்தான் மக்களால் பக்தியுடன் வணங்கப்படுகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். அவர் மேற்கொண்ட சமூக சேவைப் பணிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சிமாநாட்டு துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 12th, 11:01 am
உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது நாடாளுமன்ற நண்பர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சர்வதேச பால்வள கூட்டமைப்பின் தலைவர் திரு பிரசல் அவர்களே, தலைமை இயக்குநர் திருமிகு கரோலின் எமாண்ட் அவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM inaugurates International Dairy Federation World Dairy Summit 2022 in Greater Noida
September 12th, 11:00 am
PM Modi inaugurated International Dairy Federation World Dairy Summit. “The potential of the dairy sector not only gives impetus to the rural economy, but is also a major source of livelihood for crores of people across the world”, he said.கால்நடை துறை மற்றும் பால் பொருட்கள் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கும், ரூ.54,618 கால்நடை சிறப்பு நிதித் தொகுப்புக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 14th, 07:40 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கால்நடை துறைக்கு சிறப்பு நிதித் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 2021-22 தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்புக்கு ஊக்கமளித்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 10 கோடி விவசாயிகளுக்கு நியாயமான வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த பொருளாதார தொகுப்பின் மூலம் மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.9,800 கோடி நிதி வழங்கி, ரூ.54,618 கோடி முதலீடு பெற திட்டமிட்டுள்ளது.