We will leave no stone unturned in fulfilling people’s aspirations: PM Modi in Bhubaneswar, Odisha
September 17th, 12:26 pm
PM Modi launched Odisha's 'SUBHADRA' scheme for over 1 crore women and initiated significant development projects including railways and highways worth ₹3800 crore. He also highlighted the completion of 100 days of the BJP government, showcasing achievements in housing, women's empowerment, and infrastructure. The PM stressed the importance of unity and cautioned against pisive forces.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமான 'சுபத்ரா' திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
September 17th, 12:24 pm
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா' திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.09.2024) தொடங்கி வைத்தார். இது பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமாகும். மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திரு நரேந்திர மோடி , ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 14 மாநிலங்களில் பிரதமரின் கிராம்பபுற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவியை பிரதமர் விடுவித்தார். நாடு முழுவதும் இருந்து வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப் பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்பு, பிரதமரின் நகர்ப்புற நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான ஆவாஸ் + 2004 (Awaas+ 2024) செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டப் பயனாளிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரை
March 14th, 05:49 pm
இன்றைய பிரதமரின் ஸ்வநிதி திருவிழா, நம்மைச் சுற்றி வாழும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. கொரோனா காலத்தில், தெருவோர வியாபாரிகளின் பலம் என்ன என்பதை அனைவரும் பார்த்துள்ளனர். இந்த விழாவில் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் என சாலையோரங்களில் கடைவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தில்லியில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்ட பயனாளிகளிடையே பிரதமர் உரையாற்றினார்
March 14th, 05:00 pm
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் இன்று நடைபெற்ற பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட நாடேங்கிலும் உள்ள ஒரு லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்களை வழங்கினார். ஐந்து பயனாளிகளுக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் காசோலைகளை அவர் வழங்கினார். தில்லி மெட்ரோவின் நான்காவது கட்டத்தின் கூடுதல் இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 06th, 01:30 pm
கொல்கத்தாவில் இன்று ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு இணைப்புத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நகர்ப்புற போக்குவரத்துத் துறையை பூர்த்தி செய்யும் வளர்ச்சித் திட்டங்களில் மெட்ரோ ரயில், பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.நவ்சாரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 04:40 pm
நாடு முழுவதும், நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் தற்போது ஒரு உற்சாகமான விவாதம் நடந்து வருகிறது. அந்த விவாதம் மோடியின் உத்தரவாதம் என்பதைச் சுற்றியே சுழல்கிறது. மோடி என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவார் என்பதை ஒவ்வொரு குடிமகனும் ஒப்புக் கொள்கிறான். ஒருவேளை நாட்டின் பிற பகுதிகளுக்கு இது ஒரு புதுமையான கருத்தாக இருக்கலாம், ஆனால் மோடியின் வார்த்தை அவரது பந்தம் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்பதை குஜராத் மக்கள் பல ஆண்டுகளாக அறிவார்கள்குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 22nd, 04:25 pm
குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மின் உற்பத்தி, ரயில், சாலை, ஜவுளி, கல்வி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டங்கள் ஆகும்.லக்னோவில் நடைபெற்ற, உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட திட்டப் பணிகளின் 4-வது அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 19th, 03:00 pm
வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை உருவாக்கும் உறுதியுடன் நாம் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தொழில்நுட்பத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்துள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காணொலிக் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் நிலை மோசமாக இருந்தது. குற்றங்கள், கலவரங்கள், திருட்டுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது மாநிலத்தின் முன்னேற்றங்களைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிவைக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தின் சூழலை மிகச் சிறப்பாக மாற்றும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
February 19th, 02:30 pm
லக்னோவில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 பிப்ரவரியில் நடைபெற்ற உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசம் முழுவதும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14000 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.நமோ பாரத் எனும் பிராந்திய விரைவு ரயிலில் பிரதமர் பயணம் செய்தார்
October 20th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நமோ பாரத் எனும் பிராந்திய விரைவு ரயிலை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்து, ரயிலில் பயணம் செய்தார்.உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்
January 02nd, 01:01 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
January 02nd, 01:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும்.Double engine government knows how to set big goals and achieve them: PM Modi
December 28th, 01:49 pm
PM Narendra Modi inaugurated Kanpur Metro Rail Project and Bina-Panki Multiproduct Pipeline Project. Commenting on the work culture of adhering to deadlines, the Prime Minister said that double engine government works day and night to complete the initiatives for which the foundation stones have been laid.கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் .
December 28th, 01:46 pm
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்த அவர், ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். பினா-பாங்கி பல்பொருள் குழாய் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கான்பூரில் உள்ள பங்கி வரை நீட்டிக்கப்பட்டுள்ள குழாய், பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களைப் பெற இப்பிராந்தியத்திற்கு உதவும். உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் புரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.