NCC highlights the idea of Ek Bharat Shreshtha Bharat: PM Modi
January 27th, 05:00 pm
Prime Minister Narendra Modi addressed the annual NCC PM rally at the Cariappa Parade Ground in Delhi. PM Modi witnessed a cultural program and presented the Best Cadet Awards. He also flagged in Mega Cyclothon by NCC Girls and Nari Shakti Vandan Run (NSRV) from Jhansi to Delhi. “Being present among NCC cadets highlights the idea of Ek Bharat Shreshtha Bharat, the Prime Minister said as he observed the presence of cadets from different parts of the country.டெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்.
January 27th, 04:30 pm
டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம்
January 17th, 09:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர், போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பார்.சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்
January 03rd, 08:09 am
சாவித்ரிபாய் புலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஜெயந்தியை முன்னிட்டு அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.மனதின் குரல், டிசம்பர் 2023
December 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
January 03rd, 11:52 am
ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்
January 03rd, 11:49 am
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.