ஐந்து வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
June 27th, 10:17 pm
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்கள், போபால் (ராணி கமலாபதி) - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; போபால் (ராணி கமலாபதி) - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ராஞ்சி - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் கோவா (மட்கான்) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆகும்.அஜ்மீர்-தில்லி கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 12th, 11:01 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, ராஜஸ்தான் முதலமைச்சரும், எனது நண்பருமான திரு அசோக் கெலாட் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜஸ்தான் மாநில அமைச்சர்களே, சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர்களே, நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களே, ராஜஸ்தான் மாநிலத்தின் என் சகோதர, சகோதரிகளே வணக்கம்.ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
April 12th, 11:00 am
ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.உத்தரப்பிரதேசத்தின் ஜேவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 01:06 pm
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மிகவும் பிரபலத் தலைவரும் கர்மயோகியுமான திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, துடிப்புமிக்க எங்களது பழங்கால சகாவும் துணை முதலமைச்சருமான திரு.கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு.ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே.சிங், சஞ்சீப் பால்யான், எஸ்.பி.சிங் பாஹேல் மற்றும் பி.எல்.வர்மா அவர்களே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களே, இங்கு பெருந்திரளாகக் குழுமியுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே.உத்தரப் பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
November 25th, 01:01 pm
உத்தரப்பிரதேசத்தின் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஜெனரல் வி.கே. சிங், திரு சஞ்சீவ் பால்யான், திரு எஸ். பி. சிங் பாஹேல் மற்றும் திரு பி.எல். வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மத்தியப்பிரதேசம், போபாலில் பல்வேறு ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
November 15th, 03:21 pm
மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
November 15th, 03:20 pm
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு ரயில்வே திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேசத்தில் அகலப்படுத்தப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட உஜ்ஜைன்-ஃபதேஹாபாத் சந்திரவதிகஞ்ச் அகலப்பாதை பிரிவு, போபால்-பர்கேரா பிரிவில் மூன்றாவது பாதை, விரிவாக்கப்பட்ட மற்றும் மின்மயமாக்கப்பட்ட மதேலா-நிமர் கெரி அகலப்பாதை பிரிவு மற்றும் மின்மயமாக்கப்பட்ட குணா-குவாலியர் பிரிவு உள்ளிட்ட ரயில்வேயின் பல முன்முயற்சிகளையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். உஜ்ஜைன்-இந்தோர் மற்றும் இந்தோர்-உஜ்ஜைன் இடையே இரண்டு புதிய மெமு ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர், முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.போபாலில் மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்பணிக்கவுள்ளார்
November 14th, 04:41 pm
மத்தியப் பிரதேசத்துக்கு நாளை(நவம்பர் 15ம்தேதி) செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயல் நிலையத்தை மாலை 3 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.ஜன்ஜாதிய கவுரவ் தினத்தையொட்டி, பிரதமர் நவம்பர் 15-ம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறார்
November 14th, 04:40 pm
அமர் ஷாகித் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதியை மத்திய அரசு ஜன்ஜாதிய கவுரவ் தினமாகக் கொண்டாடுகிறது. இதனையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, போபாலின் ஜம்புரி மைதானத்தில் நடைபெறும் ஜன்ஜாதிய கவுரவ் தின மகாசம்மேளனத்தில் கலந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேசம் செல்கிறார். அங்கு பகல் ஒரு மணியளவில், ஜன்ஜாதிய சமுதாய நலனுக்கான பல்வேறு முன்முயற்சிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.