இந்தியாவில் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்
August 14th, 09:47 pm
இந்தியாவில் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராம்சார் ஒப்பந்தத்தின்படி மூன்று இடங்கள் சேர்க்கப்பட்டதற்காக தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்தியா ஜனநாயகத்தின் தாய்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இது 2023ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல், மேலும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 97ஆவது பகுதியும் இதுவாகும். உங்களனைவரோடும் மீண்டும் ஒருமுறை உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கணிசமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த மாதம் சுமார் 14ஆம் தேதி வாக்கில், வடக்கு முதல் தெற்கு வரையும், கிழக்குத் தொடங்கி மேற்கு வரையும், நாடெங்கிலும் பண்டிகைகளின் ஒளி பளிச்சிட்டு வந்தது. இதன் பிறகு தேசம் தனது குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்தது. இந்த முறையும் கூட, குடியரசுத் திருநாள் கொண்டாட்டத்தின் பல பரிமாணங்களுக்குப் பல பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. ஜைஸால்மேரிலிருந்து புல்கித் என்பவர் எழுதியிருக்கிறார், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த அணிவகுப்பின் போது, கர்த்தவ்ய பத்தினை ஏற்படுத்திய தொழிலாளர்களைக் காண்பது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக எழுதியிருக்கிறார். அணிவகுப்பில் இடம் பெற்ற காட்சிகளில் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்த்து ஆனந்தப்பட்டதாக கான்பூரைச் சேர்ந்த ஜயா அவர்கள் எழுதியிருக்கிறார். இதே அணிவகுப்பில், முதன்முறையாகக் கலந்து கொண்ட ஒட்டகச்சவாரி செய்யும் வீராங்கனைகள் பிரிவும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் பெண்கள் பிரிவும் நிறைய பாராட்டுக்களைப் பெற்றன.நாட்டில் மேலும் 10 சதுப்பு நிலப்பகுதிகள் ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி
August 03rd, 10:30 pm
நாட்டில் மேலும் 10 சதுப்பு நிலப்பகுதிகள் ராம்சர் எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.தெற்கு ஆசியாவில் இந்தியா பெருமளவுக்கு ராம்சர் இடங்கள் கட்டமைப்பைக் கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி
February 03rd, 10:30 pm
குஜராத்தில் கிஜடியாயா வனவிலங்கு சரணாலயம், உ.பி.யில் பக்கிரா வனவிலங்கு சரணாலயம் ஆகிய இரண்டு இடங்கள் ராம்சரில் சேர்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி செரிவித்துள்ளார்.நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி: பிரதமர்
August 14th, 07:03 pm
நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.