செப்டம்பர் 8 அன்று ‘கடமைப் பாதையை’ தொடங்கிவைக்கும் பிரதமர் இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையை திறந்துவைக்கிறார்

September 07th, 01:49 pm

2022 செப்டம்பர் 8 அன்று இரவு 7 மணிக்கு ‘கடமைப் பாதையை’ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். அதிகாரத்தின் குறியீடாக இருந்த முந்தைய ராஜபாதை கடமைப்பாதையாக மாறுவது பொதுமக்களின் உடைமை மற்றும் அதிகாரத்திற்கான உதாரணத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் போது இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையையும் பிரதமர் திறந்துவைப்பார். அமிர்தகாலத்தில் புதிய இந்தியாவுக்கான பிரதமரின் 2-வது உறுதிமொழியான ‘காலனிய மனநிலையின் அனைத்து அடையாளத்தையும் அகற்றுதல்’ என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

January 30th, 11:30 am

நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.

Glimpses from 73rd Republic Day celebrations at Rajpath New Delhi

January 26th, 01:00 pm

India marked 73rd Republic Day with immense fervour and enthusiasm. The country's perse culture, prowess of the Armed Forces were displayed at Rajpath in New Delhi. President Ram Nath Kovind, Prime Minister Narendra Modi and other dignitaries attended the iconic parade.

புதுதில்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற 72-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் கண்ணோட்டம்

January 26th, 12:16 pm

புதுதில்லி ராஜ்பாத்தில், இந்தியாவின் 72-வது குடியரசு தின கோலாகல கொண்டாட்டதைக் குறிக்கும் வகையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போர் வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் பார்வையிட்டார்

February 19th, 03:52 pm

‘கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப்’ பிரதமர் இன்று பார்வையிட்டார். நாடு முழுவதிலும் இருந்து கைவினைப்பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ள கைவினைக் கலைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களின் அரங்குகளை அவர் பார்வையிட்டார்.