அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர்

September 29th, 02:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 அக்டோபர் 1 ஆம் தேதி தெலங்கானாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2.15 மணியளவில், மகபூப்நகர் மாவட்டத்திற்கு வரும் பிரதமர், அங்கு சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி

May 06th, 11:46 am

சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் மற்றும் ஹுப்ளி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.