ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் தரிசித்துப் பூஜை செய்தார்
January 16th, 06:13 pm
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். தெலுங்கில் ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களைக் கேட்ட திரு மோடி, தோலு பொம்மலாட்டா என்று அழைக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரிய நிழல் பொம்மலாட்ட கலை வடிவத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட ஜடாயுவின் கதையைக் கண்டு மகிழ்ந்தார்.புட்டபர்த்தியில் ஜூலை 4-ஆம் தேதி சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்
July 03rd, 06:29 pm
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை நிறுவியுள்ளது. பிரசாந்தி நிலையம் என்பது ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரதான ஆசிரமம் ஆகும். கொடையாளர் திரு ரியூகோ ஹீராவின் நன்கொடையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையம், கலாச்சார பரிமாற்றம், ஆன்மீக மற்றும் உலகளாவிய இணக்கத்தை ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பலதரப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து, இணைந்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளை ஆராய்வதற்கு சிறந்த சூழலை இந்த மையம் வழங்கும். இதன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளும், உள்கட்டமைப்பும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஏதுவாக இருக்கும். பிரம்மாண்டமான வளாகத்தில் தியான அரங்கங்கள், கண்களுக்கு குளிர்ச்சியான தோட்டங்கள் மற்றும் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.