மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 21st, 09:57 pm

கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரோமினேட் கார்டனில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மகாத்மா காந்தியின் மாண்புகளை அவர் நினைவு கூர்ந்தார். 1969-ஆம் ஆண்டில் காந்திஜியின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.