Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.முதலாவது சர்வதேச சூரியசக்தி திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி
September 05th, 11:00 am
வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட நூல்கள். வேதங்களில் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்று சூரியனைப் பற்றியது. இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் பாராயணம் செய்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் சூரியனுக்கு தங்கள் வழிகளில் மரியாதை அளிக்கின்றனர். மதிக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் சூரியனுடன் தொடர்புடைய திருவிழாக்களும் உள்ளன. இந்த சர்வதேச சூரிய திருவிழா சூரியனின் தாக்கத்தை கொண்டாட உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கிறது. இது ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க உதவும் ஒரு திருவிழா.இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின
July 28th, 11:37 pm
முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 02:15 pm
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனதுநண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, பொதுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேராசிரியர் திரு அஜய் சூட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அவர்களே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் அவர்களே, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, மூத்த அதிகாரிகளே, முப்படைகளின் துணிச்சலான வீரர்களே, பொக்ரானில் கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பிரதமர் பார்வையிட்டார்
March 12th, 01:45 pm
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்வையிட்டார். நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.Cabinet approves inclusion of additional activities in National Livestock Mission
February 21st, 11:29 pm
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved further modification of National Livestock Mission.வேலைவாய்ப்பு விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 13th, 11:00 am
தேசிய அளவிலான இது போன்ற வேலைவாய்ப்பு விழாக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பா.ஜ.க அரசின் புதிய அடையாளமாக மாறி உள்ளன. இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. விடுதலையின் அமிர்த காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கு உங்கள் முன் உள்ளது. நிகழ்காலத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்
June 13th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் இன்று (13.06.2023) காணொலி காட்சி மூலம் உரையாற்றியதுடன் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.People of Karnataka must be wary of both JD(S) and Congress. Both are corrupt and promote dynastic politics: PM in Chitradurga
May 02nd, 11:30 am
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Karnataka’s Chitradurga.. PM Modi congratulated the Karnataka BJP on their Sankalp Patra, stating that it outlines a roadmap for the state to become the leading state in the country with modern infrastructure. The Sankalp Patra also prioritizes the welfare of the underprivileged, including the poor, downtrodden, exploited, deprived, tribals, and backward communities.PM Modi’s high-octane speeches in Karnataka's Chitradurga, Hosapete and Sindhanur
May 02nd, 11:00 am
Prime Minister Narendra Modi today addressed public meetings in Karnataka’s Chitradurga, Hosapete and Sindhanur. PM Modi congratulated the Karnataka BJP on their Sankalp Patra, stating that it outlines a roadmap for the state to become the leading state in the country with modern infrastructure. The Sankalp Patra also prioritizes the welfare of the underprivileged, including the poor, downtrodden, exploited, deprived, tribals, and backward communities.ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை
April 26th, 03:40 pm
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அனைவரும் நோயற்று இருக்கட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். துன்பத்தால் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்பது இந்தியாவின் வேதவாக்காக உள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகளவில் பெருந்தொற்றுகள் இல்லாத காலத்தில் சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை அனைவருக்கும் பொருத்தமாக இருந்துள்ளது. இன்று நாம் கூறுகின்ற ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பது செயல்பாட்டில் ஒரே மாதிரியான சிந்தனையாகும். மேலும் எங்களின் தொலைநோக்குப்பார்வை மனித குலத்திற்கு மட்டுமானது அல்ல. தாவரங்களில் இருந்து விலங்குகள் வரையும், நிலத்தில் இருந்து நதிகள் வரையும் நம்மை சுற்றியுள்ள அனைத்தும் சுகாதாரத்துடன் இருக்கும் போதுதான் நாமும் சுகாதாரமாக இருக்க முடியும் என்ற ஒட்டுமொத்த சூழலையும் இது உள்ளடக்கியதாகும்.ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை
April 26th, 03:39 pm
மேன்மை தங்கியவர்களே, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களே, மேற்காசியா, சார்க், ஆசியான், ஆப்பிரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த சிறப்புமிகு பிரதிநிதிகளே, உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன். எனது அமைச்சரவை சகாக்களுக்கும், இந்திய சுகாதார தொழில்துறையின் பிரதிநிதிகளுக்கும் வணக்கம்!மணிப்பூரின் இம்பாலில், மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
April 24th, 10:10 am
இந்த ஆண்டு சிந்தனை முகாம் மணிப்பூரில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக கோப்பைகளை வென்று மூவர்ணக் கொடியின் புகழை மேலும் உயர்த்தியுள்ளனர். இந்தப் பகுதியின் உள்ளூர் விளையாட்டுகளான சாகோல் கஞ்சாய், தங்-டா, யூபி லக்பி, முக்னா மற்றும் ஹியாங் தன்பா போன்றவை தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளன. நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் மணிப்பூரும், வடகிழக்கு மாநிலங்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மணிப்பூரின் ஊ-லவாபி விளையாட்டு கபடியைப் போன்றது. இதேபோல் ஹியாங் தன்னபா விளையாட்டு கேரள மாநிலத்தில் நடத்தப்படும் படகுப் போட்டியை போன்றது. போலோ எனப்படும் குதிரையேற்றத்துடன் மணிப்பூர் மாநிலம் வரலாற்று ரீதியிலான நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது. அத்துடன் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணங்களை சேர்த்து இருப்பதுடன் விளையாட்டுப் பன்முகத்தன்மைக்கும் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன. சிந்தனை முகாமின் இறுதியில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறுவார்கள்.மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
April 24th, 10:05 am
மணிப்பூரின் இம்பாலில் இன்று நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சிந்தனை முகாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 25th, 11:40 am
கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார் பிரதமர்
March 25th, 11:30 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமாக வழங்கும். 2023-ம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.‘பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்பு (பிஎம் விகாஸ் )’ குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
March 11th, 10:36 am
பிரதமரின் விஸ்வகர்மா திறன் கௌரவிப்புத் திட்டம் அல்லது சுருக்கமாக பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது இந்த சிந்தனையின் விளைவு. இந்த பட்ஜெட்டில் பிரதமரின் விஸ்வகர்மா திட்ட அறிவிப்பு பரவலான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது; ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரை
March 11th, 10:12 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றினார். 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்குகளில் இதுவே கடைசியாகும்.நிதித்துறை குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 07th, 10:14 am
நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகளை அமல்படுத்துவதில் கூட்டு உடைமை மற்றும் சம கூட்டுமுயற்சிக்கு அரசு வழிவகை செய்கிறது. கொரோனா பெருந்தொற்றின் போது நிலவிய இந்தியாவின் நிதி மற்றும் நிதிசார் கொள்கையின் தாக்கங்களை தற்போது ஒட்டுமொத்த உலகமும் கண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இது நிகழ்ந்தது. நிதி சீர்திருத்தம், வெளிப்படைத் தன்மை மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை நோக்கி இந்தியா தற்போது முன்னேறுவதால் மிகப்பெரிய மாற்றத்தையும் நாம் சந்திக்கிறோம். விவாதங்களின் தொடக்கம் மற்றும் முடிவில் நிலவி வந்த கேள்விக்குறிகளுக்கு, நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தற்போது மாற்றாக விளங்குகின்றன. உலகளாவிய பொருளாதாரத்தின் வளமான தலமாக இந்தியா அழைக்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தது. இதில் அதிக முதலீடுகள் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்பட்டன.‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்' குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரை
March 07th, 10:00 am
‘வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்’ குறித்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணைய வழிக் கருத்தரங்குகள் தொடரில் இது பத்தாவதாகும்.