இந்தியா-மொரீஷியஸ்: திட்டங்களின் மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 29th, 01:15 pm
கடந்த 6 மாதங்களில் பிரதமர் ஜுக்னவுத்துக்கும் எனக்கும் இடையே நடைபெறும் ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான துடிப்பான, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது ஒரு சான்றாகும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய பங்கெடுப்பாளராக மொரீஷியஸ் திகழ்கிறது.மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர்
February 29th, 01:00 pm
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் இன்று காணொலி மூலம் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும். 2024 பிப்ரவரி 12 அன்று இரு தலைவர்களும் மொரீஷியஸில் யுபிஐ, ரூபே அட்டை சேவைகளை தொடங்கியதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களின் தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம் மற்றும் படகுத்துறையை திறந்து வைக்கின்றனர்
February 27th, 06:42 pm
மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் 2024 பிப்ரவரி 29 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணைந்து புதிய விமான ஓடுபாதை, செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை மற்றும் ஆறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைக்க உள்ளனர்.இலங்கை மற்றும் மொரீஷியஸில் யு.பி.ஐ சேவைகளைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 12th, 01:30 pm
மேதகு அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே, மேதகு பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் அவர்களே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, இலங்கை, மொரீஷியஸ் மற்றும் பாரத மத்திய வங்கிகளின் மதிப்புமிக்க ஆளுநர்களே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மதிப்பிற்குரியவர்களே அனைவருக்கும் வணக்கம்!மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 12th, 01:00 pm
இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவைகளை தொடங்கி வைக்க உள்ளனர்
February 11th, 03:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் 2024 பிப்ரவரி 12 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர்.