பொதுச் சுகாதாரத் திட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கு நமது அரசு ஒப்புதல் அளித்துள்ளது: பிரதமர் மோடி
June 29th, 11:52 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 200 படுக்கைகள் கொண்ட உயர்சிறப்பு மருத்துவ பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.எய்ம்ஸ்-ல் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார், வேறுசில திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார்
June 29th, 11:45 am
புதுதில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் (எய்ம்ஸ்) வயது முதிர்வு தேசிய மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (29.06.18) அடிக்கல் நாட்டினார். இந்த மையம் வயது முதிர்ந்தவர்களுக்கு பல்வகை சிறப்பு மருத்துவப் பராமரிப்பை வழங்கும். இந்த மையத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய பொது வார்டு அமைந்திருக்கும்.நாடு முழுதும் சுகாதாரத் திட்டங்களில் பலனடைந்தோருடன் பெற்றோருடன் காணொலி மூலம் பிரதமர் உரையாடல்
June 07th, 10:30 am
பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna) உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலனடைந்தவர்களுடன் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி (விடியோ) மூலம் உரையாடினார். இவ்வாறு விடியோ மூலம் பிரதமர் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களால் பலனடைந்த மக்களுடன் உரையாடுவது ஐந்தாவது முறையாகும்.ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னைப்போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் இந்நாட்டின் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர்தான் காரணம்: பிரதமர் மோடி
April 14th, 02:59 pm
சத்தீஸ்கரில் உள்ள பீஜாப்பூரில் ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கியத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அம்பேத்கர் பிறந்த நாளில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கிவைப்பதன் அடையாளமாக சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் பகுதியில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தைத் திறந்துவைத்தார் பிரதமர்
April 14th, 02:56 pm
அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, மத்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார உறுதியளிப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதன் அடையாளமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்துவைத்தார். சத்தீஷ்கர் மாநிலத்தில் மாற்றத்தை விரும்பும் மாவட்டமான பீஜப்பூரில் உள்ள ஜங்லா மேம்பாட்டு முனையத்தில் இந்த மையம் தொடங்கிவைக்கப்பட்டது.சுகாதாரக் கட்டமைப்புக்கு ஊக்கம்
March 21st, 10:20 pm
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், தேசிய சுகாதார இயக்கத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பாக, ரூ.85,217 கோடிக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.