பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ், மீன்வளத் துறையின் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் துணைத் திட்டமான "பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா" திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது

February 08th, 08:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளில் மீன்வளத் துறையை முறைப்படுத்துவதற்கும், மீன்வளக் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் துணைத் திட்டமான பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.