ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகம் வெளியீடு குறித்த பிரதமரின் காணொலி செய்தி

January 18th, 02:10 pm

ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்

January 18th, 02:00 pm

ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.