போய்லா போய்ஷாக் தினத்தையொட்டி மகிழ்ச்சி, அமைதி, வளம் பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
April 15th, 09:26 am
போய்லா போய்ஷாக் தினத்தையொட்டி இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
April 08th, 01:16 pm
மிகவும் மங்களகரமானதொரு தருணத்தில், அதாவது வங்காளி வருடப் பிறப்பு வரவிருக்கும் தருணத்தில் நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறீர்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் எனது புது வருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வருகை நம் இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையேயான நட்புறவில் பொற்கால யுகத்தைக் குறிப்பதாக அமைகிறது. நமது உறவில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்கள், நமது கூட்டணியின் சாதனைகள் ஆகியவை உங்களது வலுவான. தீர்மானகரமான தலைமையின் தெள்ளத் தெளிவான அங்கீகாரமாகவே அமைகின்றன. 1971-ம் ஆண்டின் விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது என்ற உங்கள் முடிவு இந்திய மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. பயங்கரவாத ஆட்சியின் பிடியிலிருந்து வங்கதேசத்தை விடுவிக்க இந்திய வீரர்களும் வீரஞ்செறிந்த முக்தி பாகினிகளும் இணைந்து நின்று போராடினர் என்பதை அறிந்து கொள்ளும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கின்றனர்.