பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை
March 04th, 01:00 pm
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த இந்த பட்ஜெட் இணையவழி கருத்தரங்கு ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரியும். இந்த பட்ஜெட் நமது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழு பட்ஜெட் ஆகும். நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பல துறைப்பிரிவுகளில்அரசு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதை நீங்கள் பட்ஜெட்டில் பார்த்திருப்பீர்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பட்ஜெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 04th, 12:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இணைய கருத்தரங்குகள் வளர்ச்சியின் எந்திரங்களாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை எடுத்துக் கொண்டு நடத்தப்படுகின்றன. வளர்ச்சியின் உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி இயக்கங்கள்; ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, ஏற்றுமதி குறித்து நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையகருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். இந்த வரவு செலவுத் திட்டம்(பட்ஜெட் )அரசின் 3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழு வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் விநியோகம் என்றும் இது எதிர்பார்ப்புகளுக்கு மேலானது என்றும் தெரிவித்தார். பல துறைகளில், நிபுணர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.