தாயின் பெயரில் ஒரு மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுவதற்கு குடியரசுத் துணைத் தலைவருக்கு பிரதமர் பாராட்டு

July 27th, 10:04 pm

குடியரசுத்துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர், தனது தாயாரை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றை நடுவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

ஜி-7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 14th, 09:54 pm

முதலாவதாக இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் நமக்கு அன்பான விருந்து உபசாரம் அளித்ததற்காகவும் பிரதமர் மெலோனிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிபர் ஓலஃப் ஷோல்ஸ்-க்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜி-7 உச்சிமாநாடு தனித்துவமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தக் குழுவின் 50-வது ஆண்டின் ஜி-7 நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை அமர்வில் பிரதமர் பங்கேற்பு

June 14th, 09:41 pm

இத்தாலியின் அபுலியாவில் இன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். குழுவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார்.