நாடாளுமன்றத்தில் பி டி உஷாவைப் பிரதமர் சந்தித்தார்

July 20th, 03:58 pm

நாடாளுமன்றத்தில் பி டி உஷாவை சந்தித்த பின் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

1975 நெருக்கடி நிலை, நம் ஜனநாயகத்தின் கருப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி

June 25th, 12:21 pm

ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.

கினலூரில் உஷா தடகள பள்ளியில் செயற்கை ட்ராக்—ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார்

June 15th, 06:39 pm

உஷா தடகள பள்ளியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “S என்றால் Skill (திறமை); P என்றால் Perseverance (பொறுமை); O என்றால் Optimism (நேர்மறை சிந்தனை); R என்றால் Resilience (உறுதி); T என்றால் விடா உறுதி (Tenacity); S என்றால் திண்மை (Stamina), என்று SPORTS-க்கு பொருள் கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் திறமைக்கு எப்போதும் குறைவில்லை, சரியான வாய்ப்பை அளித்து திறமையை வளர்க்கும் சூழலை மேம்படுத்துவதே தேவையாக உள்ளது. “நாட்டில் உள்ள பெண்கள் நம்மை பல துறைகளில் பெருமை படுத்தி உள்ளனர் – அது விளையாடு துறையில் அதிகமாக உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.