உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் நடைபாதை (ஐஎம்இசி)
September 09th, 09:40 pm
புதுதில்லியில் செப்டம்பர் 9, 2023 அன்று நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை (பிஜிஐஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோ பைடன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டாண்மை (பி.ஜி.ஐ.ஐ) மற்றும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 09th, 09:27 pm
இந்த சிறப்பு நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். எனது நண்பர் அதிபர் திரு பைடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதைக் கண்டோம். இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்புக்கான ஒரு பயனுள்ள ஊடகமாக வரும் காலங்களில் இது மாறும்.