இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

December 16th, 01:00 pm

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.

இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின

July 28th, 11:37 pm

முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

March 12th, 10:00 am

குஜராத் ஆளுநர் ஆச்சார்யா திரு. தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, அமைச்சரவையில் எனது சகாவான ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், குஜராத் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஆளுநர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நான் திரையில் காணும் சகாக்களே, இன்று 700 க்கும் மேற்பட்ட இடங்களில் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். அநேகமாக ரயில்வே வரலாற்றில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருக்காது. 100 ஆண்டுகளில் இது முதல் முறை. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக ரயில்வேயையும் நான் பாராட்டுகிறேன்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1,06,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

March 12th, 09:30 am

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 05th, 05:30 pm

ஒடிசா ஆளுநர் திரு. ரகுபர் தாஸ் அவர்களே, முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு. பிஸ்வேஸ்வர் டுடு அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

March 05th, 01:44 pm

ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ. 19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணெய், எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 05th, 10:39 am

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா ஜி.கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, கொண்டா சுரேகா அவர்களே, கே.வெங்கட் ரெட்டி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான டாக்டர் கே.லக்ஷ்மன் அவர்களே மற்றும் மதிப்புமிக்க பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ.6,800 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

March 05th, 10:38 am

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ.6,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, இயற்கை எரிவாயு போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கியது.

பீகார் மாநிலம் பெகுசாராயில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 02nd, 08:06 pm

ஜெய் மங்லா கர் மந்திர் மற்றும் நௌலாகா மந்திரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, 'வளர்ச்சியடைந்த இந்தியா வளர்ச்சியடைந்த பீகார்' வளர்ச்சிக்கு பங்களிக்கும் உறுதியுடன் நான் பெகுசராய்க்கு வந்துள்ளேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை சந்திப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.

பீகார் மாநிலம் பெகுசாராயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

March 02nd, 04:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் பெகுசாராயில் ரூ. 13,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடு முழுவதும் சுமார் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் பிப்ரவரி 20 அன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொள்கிறார்

February 19th, 08:55 am

காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை ஆகும். இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குவார். ' வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.

The goal of a Viksit Bharat can only be achieved if all states are developed: PM Modi

February 03rd, 02:10 pm

Prime Minister Narendra Modi dedicated to the nation and laid the foundation stone for projects worth more than Rs 68,000 crore in Sambalpur, Odisha aimed at boosting the energy sector involving natural gas, coal and power generation apart from important projects of road, railway and higher education sector. Addressing the gathering, the Prime Minister said that it is a significant occasion for the development journey of Odisha.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்

February 03rd, 02:07 pm

சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறை தவிர, இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய எரிசக்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐஐஎம் சம்பல்பூர் நிறுவனத்தின் மாதிரி மற்றும் புகைப்பட கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு

January 08th, 10:06 am

சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.

லட்சத்தீவின் அகட்டி விமான நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 02nd, 04:45 pm

லட்சத்தீவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது. கப்பல் போக்குவரத்து முக்கியத் துறையாக இருந்தபோதும், துறைமுக உள்கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை. கல்வி, சுகாதாரம் முதல் பெட்ரோல், டீசல் கிடைப்பது வரை பல்வேறு துறைகளில் சவால்கள் காணப்பட்டன. எங்கள் அரசு இப்போது இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக கவனித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. லட்சத்தீவின் முதல் பெட்ரோல், எண்ணெய், உயவு எண்ணெய்க்கான மொத்த சேமிப்பு வசதி கவரட்டி, மினிக்காய் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரையாற்றினார்

January 02nd, 04:30 pm

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், லட்சத்தீவுகள் வழங்கும் மகத்தான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டதோடு, சுதந்திரத்திற்குப் பிறகு லட்சத்தீவுகள் எதிர்கொண்ட நீண்டகால புறக்கணிப்பையும் சுட்டிக்காட்டினார். கப்பல் போக்குவரத்து இப்பகுதியின் உயிர்நாடியாக இருந்தபோதிலும் பலவீனமான துறைமுக உள்கட்டமைப்பை அவர் குறிப்பிட்டார். இது கல்வி, சுகாதாரம், பெட்ரோல், டீசலுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். தற்போது அரசு அதன் அபிவிருத்திப் பணியை சரியான அக்கறையுடன் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த சவால்கள் அனைத்தும் எங்கள் அரசால் எதிர்கொள்ளப்படுகின்றன, என்று அவர் கூறினார்.

வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 18th, 02:16 pm

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

December 18th, 02:15 pm

சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

PM Modi Addresses public meetings in Sagwara and Kotri, Rajasthan

November 22nd, 09:05 am

The electoral atmosphere intensified as PM Narendra Modi engaged in two spirited rallies in Sagwara and Kotri ahead of the Rajasthan assembly election. “This region has suffered greatly under Congress rule. The people of Dungarpur are well aware of how the misrule of the Congress has shattered the dreams of the youth,” PM Modi said while addressing the public rally.