செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) டிசம்பர் 12 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
December 11th, 04:27 pm
ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.