இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 11:17 pm
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை
March 18th, 08:00 pm
புது தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான ஊடகமாக ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மாறியுள்ளது: பிரதமர் மோடி
February 26th, 11:00 am
நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.இந்தியா-சிங்கப்பூர் இடையே யூபிஐ–பேநவ் இணைப்பின் காணொலிக்காட்சி வாயிலான தொடக்கநிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர்
February 21st, 11:00 am
இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் பேநவ் நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பின் காணொலிக்காட்சி வாயிலான தொடக்கநிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் திரு. ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.இந்தியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான நிகழ்நேர பணப்பரிமாற்ற முறை இணைப்பு பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கிவைப்பு
February 20th, 12:52 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் திரு லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை பிப்ரவரி 21, 2023 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்தி காந்ததாஸ் மற்றும் சிங்கப்பூர், நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.