மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

Pariksha Pe Charcha 2025 All Episodes

February 18th, 05:30 pm

For Pariksha Pe Charcha 2025, Prime Minister Narendra Modi brought together India’s top achievers— Deepika Padukone, Sadhguru, Mary Kom, Avani Lekhara and other icons—to inspire students. Experts from sports, cinema, spirituality, technology and public service shared success strategies, mental wellness tips and holistic guidance to help students unlock their potential and appear for exams with confidence.

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள்: பிரதமர்

February 17th, 07:41 pm

தேர்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வான தேர்வு குறித்த விவாதம் 2025-ன் சிறப்பு அத்தியாயம் 2025 பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதில் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த இளம் தேர்வு வீரர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு தொடர்பான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் கடந்து வந்த அவர்களின் அனுபவங்கள், உத்திகள், நுண்ணறிவுகள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் வெளிப்படுத்தும்.

தேர்வு நேரத்தில் தேர்வு வீரர்களுக்கு மிகப்பெரிய துணைகளில் ஒன்று நேர்மறை சிந்தனை: பிரதமர்

February 15th, 05:58 pm

தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பொறுத்தவரை, சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார்: பிரதமர்

February 14th, 08:15 pm

ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு கேட்டுக்கொண்டார்.

நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்

February 13th, 07:27 pm

சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நீரஜ் சோப்ராவின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

February 12th, 02:00 pm

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உடல் பருமனை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.

தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியின் அனைத்து தொடர்களையும் காணுமாறு பிரதமர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்

February 11th, 02:57 pm

தேர்வுக்குத் தயாராவோம் 2025-ன் அனைத்து தொடர்களையும் பார்த்து நமது தேர்வு வீரர்களை ஊக்குவிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனநல ஆரோக்கியம், நலவாழ்வு குறித்த சிறப்பு தொகுப்பு பிப்ரவரி 12-ம் அன்று தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது: பிரதமர்

February 11th, 01:53 pm

'தேர்வு வீரர்கள்' விவாதிக்க விரும்பும் பொதுவான தலைப்புகளில் ஒன்று மனநலம் மற்றும் நலவாழ்வு என்பதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எனவே, இந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இந்தத் தலைப்புக்கு என்று சிறப்பான தொகுப்பு உள்ளது. இது நாளை பிப்ரவரி 12- ம் தேதி அன்று ஒளிபரப்பாகும் என்று திரு மோடி மேலும் கூறினார்.

பரீக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் பற்றிய கலந்துரையாடல்) 2025: தேர்வுகளுக்கு அப்பால்—வாழ்க்கை மற்றும் வெற்றி பற்றிய உரையாடல்

February 10th, 03:09 pm

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரிக்ஷா பே சர்ச்சாவின் (தேர்வுகள் பற்றிய கலந்துரையாடல்) 8வது பதிப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல் நடைபெற்றது. பரீட்சை தொடர்பான மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கல்வியில் நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கும் இலக்காகக் கொண்ட இந்த வருடாந்த நிகழ்வு, கற்றல், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் மனநலம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை மீண்டும் வழங்கியது.

“தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025” நிகழ்ச்சியில் மாணவர்களுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்

February 10th, 11:30 am

இந்த நிகழ்விற்கு பல குழந்தைகள் செய்திருந்தனர், அவர்களில் நாங்களும் இருப்பது.ஒரு பெரிய பாக்கியம்

தேர்வு தொடர்பான ஆலோசனை நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடல்

February 10th, 11:00 am

தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியின் 8-வது பதிப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், பல்வேறு தலைப்புகளில் அவர்களுடன் விவாதித்தார். குளிர்காலத்தில் உடலை சூடாகப் பராமரிக்க உதவிடும் வகையில் பாரம்பரிய உணவுகள் (எள்) உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ மீண்டும் வருகிறது: பிரதமர்

February 06th, 01:18 pm

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.