நல்ல மதிப்பெண்களை பெறுவதால் ஒருவர் வெற்றி பெற்று விட்டதாக அர்த்தமா? பிரதமர் என்ன சொல்கிறார் என்பதை காணுங்கள்!

January 28th, 09:00 am

தேர்வுக்கான கலந்துரையாடலின்போது தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, வாழ்க்கையை நிர்ணயிக்கும் அம்சமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தேர்வில் பெறும் வெற்றி, தோல்வி, எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற மனப்போக்கை விட்டு, மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உங்களுக்குள் மாணவரை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள் என பிரதமர் மோடி இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்

January 28th, 09:00 am

தேர்வுக்கான கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடியிடம் ஒரு மாணவர், தங்களது ஆற்றலை எவ்வாறு இனங்கண்டு சரியான வாழ்க்கைத் தொழில் வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது என்று வினவினார். இந்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், உங்களைப் பற்றி தெரிந்து கொள்வது ஒரு கடினமான பணியாகும், நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஒரே வழி, வசதியான வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி, சவால் வழிக்கு செல்வதே என்று கூறினார்.

படிப்பா, அல்லது இதர திறன் சார்ந்த செயல்பாடுகளா? இதில் எது முக்கியமானது? பிரதமர் மோடியின் பதிலுரையைக் கேளுங்கள். . .

January 27th, 09:15 am

திறன் சார்ந்த செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர் மோடி, இவற்றைப் பயின்றுப் பின்பற்றாவிட்டால், மனிதன் எந்திரமாகி விடுவான் என்று கூறினார். படிப்புக்கும், திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் சரியான நேர ஒதுக்கீடு தேவை என்று அவர் கூறினார்.

அடிப்படை உரிமைகளா அல்லது கடமைகளா? எது மிகவும் முக்கியமானது? இதைப்பற்றி பிரதமர் என்ன சொல்கிறார். படிப்போம். . .

January 27th, 09:00 am

தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியின்போது, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம் மாணவன் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளின் முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் கேட்டான்.

கேள்வித்தாளை பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிட்டது போலத் தோன்றினால் என்ன செய்வது? பிரதமர் இவ்வாறு சொன்னார் . . .

January 26th, 09:15 am

தேர்வுகளை மனஅழுத்தமின்றி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுமாறு பிரதமர் மோடி மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார். கேள்வித்தாளை பார்த்தவுடன் அனைத்தும் மறந்துவிடுவதாக கூறிய மாணவர்களுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஸ்கூட்டர்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் மக்கள் அதனை பக்கவாட்டில் ஆட்டுவது குறித்து நினைவூட்டினார். “இது அறிவியல்பூர்வமானது அல்ல. ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் ஒவ்வொருவரும் இதையே செய்கிறார்கள். அதேபோல, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, முன்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்? இவை அவர்களிடம் சௌகரிய மனநிலையை ஏற்படுத்துகிறது,” என்று பிரதமர் கூறினார்.

கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் பிரச்சினைக்கு பிரதமர் மோடியின் தீர்வு . . . இதையும் இதற்கு மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்!

January 26th, 09:00 am

தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை கூறினார். “தொழில்நுட்பப் போக்குகள் விரைவாக மாறிவருகின்றன. இந்தப் போக்குகள் குறித்து அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். தொழில்நுட்பத்தைக் கண்டு பயப்படுவது நல்லதல்ல. தொழில்நுட்பம் ஒரு நண்பன். தொழில்நுட்பம் குறித்த அறிவு மட்டும் போதாது. அதன் பயன்பாடும் மிகவும் முக்கியமானது,” என்று பிரதமர் மோடி கூறினார்.

இளைஞர்களிடம் அனில் கும்ளேயை பிரதமர் மோடி உதாரணமாக சுட்டிக்காட்டிய போது…

January 25th, 09:15 am

தேர்வுக்கான கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான அனில் கும்ளேயை உதாரணமாகக் குறிப்பிட்டார். 2002 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், மிகக் கடுமையாக காயம்பட்ட போதிலும், கும்ளே சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

மாணவர்களின் தேர்வுக்கான கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடி ஏன் விவிஎஸ் லஷ்மண், ராகுல் திராவிட் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிட்டார்? கீழே காண்போம்

January 25th, 09:00 am

தேர்வுக்கான கலந்துரையாடலின் போது, இளம் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ராகுல் திராவிட், விவிஎஸ் லஷ்மண் ஆகியோரின் பேட்டிங் பற்றி குறிப்பிட்டு, எவ்வாறு இந்தியா கிரிக்கெட் போட்டியை வென்றது என எடுத்துக்காட்டினார்.

Be confident about your preparation: PM Modi to students appearing for exams

January 20th, 10:36 am

PM Modi interacted with students as part of Pariksha Pe Charcha. He answered several questions from students across the country on how to reduce examination stress. The PM discussed subjects like importance of technology in education, dealing with the expectations of teachers and parents, future career options & more.

“தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0” நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

January 20th, 10:35 am

தேர்வுக்கான கலந்துரையாடல் 3.0 நிகழ்ச்சியை ஒட்டி புதுடெல்லி தல்கதோரா அரங்கில் மாணவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மாற்றுத் திறனாளிகள் 50 பேரும் இதில் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரிடம் மாணவர்கள் ஆலோசனைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இந்த ஆண்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.