பராக்கிரம தினத்தையொட்டி ஜனவரி 23 அன்று செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

January 22nd, 05:56 pm

செங்கோட்டையில் ஜனவரி 23 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பராக்கிரம தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 25th, 06:40 pm

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்களே, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, என்சிசி தலைமை இயக்குனர், ஆசிரியர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட தோழர்களே, ஏராளமான சிறார்கள் நேதாஜி போன்ற உடையில் எனது இல்லத்திற்கு முதல் முறையாக வந்துள்ளனர். இதற்காக உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கிறது.

என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களிடையே பிரதமர் உரையாற்றினார்

January 25th, 04:31 pm

தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட ஆர்வலர்கள் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போசைப் போல உடையணிந்து, ஏராளமான குழந்தைகள் பிரதமரின் இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்ட பிரதமர், ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என்றார்.

பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் மரியாதை

January 23rd, 09:01 am

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான இன்று கொண்டாடப்படும் பராக்ரம தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார்

January 21st, 06:35 pm

ஜனவரி 23-ம் தேதி பராக்ரம் திவாஸ்-பராக்கிரம தினத்தில், காலை 11 மணிக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை

January 23rd, 09:30 am

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

விருந்து நிகழ்ச்சியில் பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் குடியரசு தின அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்

January 24th, 04:01 pm

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார்.‌ மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

January 24th, 04:00 pm

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பழங்குடி விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி விருந்து நிகழ்ச்சியின்போது இன்று கலந்துரையாடினார்.‌ மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அர்ஜுன் முண்டா, திரு கிரன் ரிஜிஜு, திருமதி ரேணுகா சிங் ஸ்ருதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.