செங்கோட்டையில் நடைபெற்ற பராக்கிரம தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 23rd, 06:31 pm
எனது அமைச்சரவை சகாக்களான திரு கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, திருமதி மீனாட்சி லேகி அவர்களே, திரு அஜய் பட் அவர்களே, பிரிகேடியர் திரு ஆர்.எஸ்.சிகாரா அவர்களே, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஆர். மாதவன் அவர்களே, எனதருமை நாட்டு மக்களே!தில்லி செங்கோட்டையில் பராக்ரம தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
January 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பராக்ரம தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நேதாஜி குறித்த புகைப்படங்கள், ஓவியங்கள், புத்தகங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய தேசிய ஆவணக் காப்பகத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர், தேசிய நாடகப் பள்ளி வழங்கிய நேதாஜியின் வாழ்க்கை குறித்த நாடகத்தையும் பார்வையிட்டார். ஐ.என்.ஏவில் உயிருடன் இருக்கும் ஒரே முன்னாள் வீரரான லெப்டினன்ட் ஆர். மாதவனையும் அவர் பாராட்டினார். சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிரபலங்களின் பங்களிப்பை முறையாக கௌரவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில் 2021 முதல் பராக்ரம தினம் கொண்டாடப்படுகிறது.பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 23rd, 09:20 am
பராக்கிரம தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களை அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 23rd, 11:01 am
நாட்டின் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களே, அந்தமான் & நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர், ராணுவ தளபதி மற்றம் முப்படைகளின் தலைவர்கள், இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், மற்றும் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் ஆகிய அனைவருக்கும் வணக்கம்.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
January 23rd, 11:00 am
பராக்ரம தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார்.கொல்கத்தாவில் பராக்கிரம தினத்தையொட்டி பிரதமர் மோடி ஆற்றிய உரையை இணையவாசிகள் பாராட்டினர்… அதனைப் பாருங்கள் !
January 23rd, 08:45 pm
Desc : நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125–வது பிறந்த தினமான 2021, ஜனவரி 23-ம் தேதியை இந்தியா பராக்கிரம தினமாக கொண்டாடியது. இந்தச் சிறப்பு நாளையொட்டி, பிரதமர் மோடி கொல்கத்தாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நேதாஜிக்கு புகழாரம் சூட்டினார். பிரதமர் தமது உரையில், நேதாஜியின் துணிச்சலையும், இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நாடு முழுவதும் உள்ள இணையவாசிகள் பிரதமர் மோடியின் உரையைப் பாராட்டினர்.நேதாஜியின் 125வது பிறந்த நாளை நினைவுகூர கொல்கத்தாவில் நடைபெற்ற பராக்கிரம தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 23rd, 08:18 pm
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ‘பராக்கிரம தின’ விழாவுக்கு அவர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சி மற்றும் படக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். ‘ அமர நூதன் ஜவ்போனோரி தூத்’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்
January 23rd, 05:15 pm
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற ‘பராக்கிரம தின’ விழாவுக்கு அவர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், நேதாஜி பற்றிய நிரந்தர கண்காட்சி மற்றும் படக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். ‘ அமர நூதன் ஜவ்போனோரி தூத்’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான கலை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.ஜனவரி 23-ம் தேதி மேற்கு வங்கம், அசாமில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
January 21st, 02:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஜனவரி 23-ம் தேதி நடைபெறவுள்ள பராக்கிரம தின கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்காக கொல்கத்தா செல்கிறார். அசாம், சிவசாகரில் 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை வழங்குவதற்காக ஜெரங்காபதர் நகருக்கும் பிரதமர் செல்கிறார்.