தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 13th, 08:21 pm
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளின் அன்பு மற்றும் பாசத்தால் உங்களுடன் தமிழ் புத்தாண்டை இன்று கொண்டாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது. புத்தாண்டு என்பது பண்டைய பாரம்பரியத்தில் நவீனத்துவத்தின் திருவிழா. இத்தகைய பழமையான தமிழ்க் கலாச்சாரம், ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது.தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
April 13th, 08:20 pm
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமது தமிழ் சகோதர சகோதரிகள் மத்தியில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். “புத்தாண்டு என்பது பண்டைய பாரம்பரியத்தில் நவீனத்துவத்தின் திருவிழா. இத்தகைய பழமையான தமிழ் கலாச்சாரம் , ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது” என்று பிரதமர் கூறினார். தமிழ் மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தமது ஈர்ப்பையும் உணர்வுப்பூர்வமான பற்றையும் வெளிப்படுத்தினார். குஜராத்தில் உள்ள தமது பழைய சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மக்கள் அதிக அளவில் இருப்பதையும், அவர்களது அளப்பரிய அன்பையும் நினைவுகூர்ந்த பிரதமர், தமிழ் மக்கள் தம்மீது கொண்டுள்ள அன்புக்கு நன்றி தெரிவித்தார்.