பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்

December 25th, 08:56 am

மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 25th, 04:31 pm

எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்

December 25th, 04:30 pm

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்

December 24th, 07:47 pm

சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட 11 தொகுதிகளாக உள்ள இந்த இருமொழி (ஆங்கிலம் மற்றும் இந்தி) படைப்பு, நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் எழுத்துக்கள் மற்றும் உரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்புகளில் அவரது கடிதங்கள், கட்டுரைகள், உரைகள், குறிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 1907 ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்ட 'அபயுதயா' என்ற இந்தி வார இதழின் தலையங்க உள்ளடக்கம், அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், 1903 மற்றும் 1910-ம் ஆண்டுக்கு இடையில் ஆக்ரா மற்றும் அவத் ஐக்கிய மாகாணங்களின் சட்ட மேலவையில் அவர் ஆற்றிய அனைத்து உரைகளும் இதில் இடம்பெற்றிருக்கும். ராயல் கமிஷனில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், 1910 மற்றும் 1920 க்கு இடையில் பிரிட்டிஷ் மன்னராட்சி நாடாளுமன்றத்தில் மசோதாக்களை சமர்ப்பிக்கும் போது ஆற்றிய உரைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு முன்னும் பின்னும் எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் உரைகள், மற்றும் 1923 மற்றும் 1925 க்கு இடையில் அவர் எழுதிய குறிப்புகளும் இந்த தொகுப்பு நூலில் இடம்பெறும்.

பண்டிட் மதன் மோகன் மாளவியாவிற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மரியாதை

December 25th, 07:55 pm

பண்டிட் மதன் மோகன் மாளவியாவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.