குஜராத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 12th, 12:14 pm

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்

March 12th, 12:10 pm

அகமதாபாத்தில் இன்று (12.03.2022) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜெய்ப்பூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சிஐபிஇடி : திறப்பு விழாவில் பேசிய பிரதமர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு

September 30th, 11:01 am

ராஜஸ்தானின் மண்ணின் மகனும், இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாயத்து, மக்களவையின் பாதுகாவலருமான, எங்கள் மாண்புமிகு சபாநாயகர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதல்வர் திரு. அசோக் கெலாட், மத்திய சுகாதார அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, எனது மற்ற சக ஊழியர்கள் மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. பூபேந்திர யாதவ், திரு.அர்ஜுன் ராம் மேக்வால், திரு. கைலாஷ் சவுத்ரி, டாக்டர் பாரதி பவார் திரு. பகவந்த் குபா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் திரு. வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் திரு. குலாப் சந்த் கட்டாரியா, மற்ற அமைச்சர்கள் ராஜஸ்தான் அரசாங்கத்தின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் மற்றும் ராஜஸ்தானின் எனது அன்பு சகோதர சகோதரிகள் அனைவரையும் வரவேற்கிறேன்.

ஜெய்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார்

September 30th, 11:00 am

ஜெய்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிபெட் நிறுவனத்திற்காக ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு ராஜஸ்தானில் 23 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இவற்றில் 7 மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

November 21st, 11:06 am

குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி அவர்களே, பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள் வாரிய தலைவர் திரு முகேஷ் அம்பானி அவர்களே, நிலைக்குழுவின் தலைவர் திரு டி ராஜகோபாலன் அவர்களே, இயக்குநர் பேராசிரியர் எஸ் சுந்தர் மனோகரன் அவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே மற்றும் எனது இளம் நண்பர்களே!

குஜராத் காந்திநகர் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

November 21st, 11:05 am

குஜராத் மாநிலம் காந்திநகர் பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பித்தார். 45 மெகாவாட் மோனோகிரிஸ்டாலின் சூரிய சக்தி போட்டோவோல்டைக் தகடு உற்பத்தி நிலையம், நீர் தொழில்நுட்ப சிறப்பு மையம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பல்கலைக்கழகத்தில், ‘இன்னோவேசன் மற்றும் இன்குபேசன் மையம்- தொழில்நுட்ப வர்த்தக இன்குபேசன்’, ‘ மொழியாக்க ஆராய்ச்சி மையம்’, ‘ விளையாட்டு வளாகம்’ ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ள பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

November 19th, 07:57 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ள காந்திநகர் பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் சுமார் 2600 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெறுவார்கள்.