பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
October 24th, 10:43 am
பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.சர்வதேச அபிதம்ம தினத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 17th, 10:05 am
கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு அவர்களே, பதாந்த் ராகுல் போதி மகாதேரோ அவர்களே, வணக்கத்திற்குரிய ஜங்சுப் சோடென் அவர்களே, மகாசங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மாண்புமிகு தலைவர்களே, தூதரக சமூகத்தின் உறுப்பினர்களே, புத்த மத அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே,சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
October 17th, 10:00 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான் அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின் மூலம் பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில், பாலி மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.அக்டோபர் 17 அன்று சர்வதேச அபிதாம்மா தினம் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரித்தற்கான கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார்
October 15th, 09:14 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் அக்டோபர் 17 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் சர்வதேச அபிதாம்மா தினம் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக செம்மொழியாக அங்கீகரித்தற்கான கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.