போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்
March 21st, 06:08 pm
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.இளம் கலைஞரின் ஓவியங்கள் மற்றும் பொது சுகாதாரத்தில் அவர் கொண்டுள்ள அக்கறைக்கு பிரதமர் பாராட்டு
August 26th, 06:02 pm
பெங்களூருவைச் சேர்ந்த மாணவரான திரு ஸ்டீவன் ஹாரிஸின் ஓவியங்களைப் பாராட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். வளர்ந்து வரும் 20 வயது ஓவியர், பிரதமரின் 2 அழகு மிளிரும் ஓவியங்களுடன் ஓர் கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பியிருந்தார். அவரை ஊக்கப்படுத்தியும், பாராட்டியும் பிரதமர் பதில் எழுதியுள்ளார்.