புதுதில்லியில் நடைபெற்ற B20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 27th, 03:56 pm

நாடு முழுவதும் பண்டிகைச் சூழல் நிலவும் இந்த நேரத்தில் வர்த்தகத் தலைவர்களாகிய நீங்கள் அனைவரும் இந்தியா வந்திருக்கிறீர்கள். இந்தியாவில் வருடாந்திர நீண்ட பண்டிகை காலம், ஒரு வகையில், முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பண்டிகை காலம் நமது சமூகமும் நமது வணிகங்களும் கொண்டாடும் நேரம். இந்த முறை ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டம் நிலவில் சந்திரயான் வருகையை குறிக்கிறது. நமது விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் சந்திர பயணத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், இந்திய தொழில்துறையும் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளது. சந்திரயானில் பயன்படுத்தப்படும் பல கூறுகள் நமது தொழில்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இ.களால் உருவாக்கப்பட்டு, தேவையான காலக்கெடுவுக்குள் கிடைக்கின்றன. ஒருவகையில், இந்த வெற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை இரண்டிற்கும் சொந்தமானது. இந்த முறை இந்தியாவுடன் சேர்ந்து உலகமே அதைக் கொண்டாடுகிறது என்பதும் முக்கியம். இந்த கொண்டாட்டம் ஒரு பொறுப்பான விண்வெளி திட்டத்தை இயக்குவது பற்றியது. இந்த கொண்டாட்டம் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கானது. இந்த கொண்டாட்டம் புதுமையைப் பற்றியது. இந்த கொண்டாட்டம் விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் நிலைத்தன்மை மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவது பற்றியது.

B20 இந்தியா 2023 உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

August 27th, 12:01 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற பி 20 உச்சிமாநாடு இந்தியா 2023 இல் உரையாற்றினார். பி 20 உச்சிமாநாடு இந்தியா உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் வல்லுநர்களை பி 20 இந்தியா அறிக்கை குறித்து விவாதிக்கவும் அழைத்து வருகிறது. பி 20 இந்தியா அறிக்கையில் ஜி 20 க்கு சமர்ப்பிப்பதற்கான 54 பரிந்துரைகள் மற்றும் 172 கொள்கை நடவடிக்கைகள் அடங்கும்.

நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் முயற்சிகளுக்கு, புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் பாராட்டு

April 22nd, 09:53 am

நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் முயற்சிகளுக்கு, புவி தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE

October 20th, 11:01 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat

October 20th, 11:00 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

புவி தினத்தையொட்டி பூமித்தாய்க்கு நன்றி கூறும் வீடியோ காட்சி ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 22nd, 11:29 am

பூமித்தாயின் அன்புக்கு நன்றி கூறும் விதமாகவும், பூமியை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும், புவி தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்நாளையொட்டி வீடியோ காட்சி ஒன்றையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

April 19th, 03:49 pm

இன்று உலகம் முழுவதும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரமாண்டமான நிகழ்வை நாம் அனைவரும் காண்கிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் அவர்களுக்கு, நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவை புகழ்ந்துரைத்த அவரின் வார்த்தைகளுக்காக அனைத்து இந்தியர்கள் சார்பில் டாக்டர் டெட்ராஸூக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் அவரது உரை அமைந்திருந்ததற்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இது இந்தியர்கள் அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது.

ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

April 19th, 03:48 pm

ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜூக்நாத், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உலகிலேயே முதன்முறையாக இத்தகைய மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.