டிசம்பர் 9 அன்று பிரதமர் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

December 08th, 09:46 am

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி - மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர் திரு. நரேந்திர மோடி

August 11th, 04:50 pm

தில்லியில் 109 புதிய பயிர் ரகங்களை இன்று வெளியிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலைக்கு உகந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் வெளியிட்டார்

August 11th, 02:00 pm

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

பிரதமரின் கிசான் திட்ட 10-வது தவணையைப் விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

January 01st, 12:31 pm

நமது உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியாகவும், அடித்தட்டு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்பவும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமரின் கிசான் திட்ட 10-வது தவணையைப் பிரதமர் விடுவித்தார்

January 01st, 12:30 pm

பிரதம மந்திரி உழவர் நல நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதியுதவி தவணையை விடுவித்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

August 09th, 12:31 pm

கடந்த பல நாட்களாக நான் அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் விவாதித்து வருகிறேன். ஏனெனில், அரசின் திட்டங்களின் பயன்கள் எவ்வாறு மக்களைச் சென்றடைகிறது என்பதை தெரிந்து கொள்ள இது நல்ல வழியாக இருக்கிறது. இது மக்களுடன் நேரடி தொடர்பின் பயனாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் எனது அமைச்சரவை தோழர்களே, மரியாதைக்குரிய முதலமைச்சர்களே, துணைநிலை அளுநர்களே, துணை முதலமைச்சர்களே, மாநில அமைச்சர்களே, நாடு முழுவதும் உள்ள சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!

பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை அளித்தார் பிரதமர்

August 09th, 12:30 pm

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்தார்.

PM to release commemorative coin of Rs 75 denomination to mark the 75th Anniversary of FAO

October 14th, 11:59 am

On the occasion of 75th Anniversary of Food and Agriculture Organization (FAO) on 16th October 2020, Prime Minister Shri Narendra Modi will release a commemorative coin of Rs 75 denomination to mark the long-standing relation of India with FAO. Prime Minister will also dedicate to the Nation 17 recently developed biofortified varieties of 8 crops.