ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 23rd, 08:54 pm
ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
May 23rd, 01:30 pm
சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.தில்லியில் நடைபெற்ற உலகளாவிய புத்த உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 20th, 10:45 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் திரு கிரண் ரிஜிஜூ, திரு கிஷண் ரெட்டி, திரு அர்ஜூன் ராம் மெக்வால், திருமதி மீனாட்சி லேகி, சர்வதேச புத்த கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் இருந்தும் வந்துள்ள புத்த துறவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்!உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
April 20th, 10:30 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக புத்தர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தப் பிரதமர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 19 தலைசிறந்த புத்த பிட்சுகளுக்குப் பிரதமர் புத்தபிட்சு அங்கிகளை வழங்கினார்.துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 20th, 06:20 pm
மனித சமூகத்திற்காக மிகப்பெரிய பணியை செய்துவிட்டு நீங்கள் திரும்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரைக் கண்டும் நாடு பெருமை கொள்கிறது. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்னும் கருத்தை நமது கலாச்சாரம் கற்றுத் தந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் இந்த இந்திய மாண்புகளை ஒட்டுமொத்தக் குழுவும் நிரூபித்துள்ளது. மனிதாபிமானம் மற்றும் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் இந்தியா அதற்கு முன்னுரிமை அளிக்கும்.துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
February 20th, 06:00 pm
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.துர்க்கியே மக்களுடன் இந்தியா உறுதியுடன் நிற்கிறது: பிரதமர்
February 10th, 08:11 pm
'ஆபரேஷன் தோஸ்த்' மூலம் அதிகப்பட்ச உயிர்களைப் பாதுகாக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.