ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை

August 18th, 02:15 pm

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்தியாவிற்கும், எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். உங்களை வரவேற்பதில் என்னுடன் 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மற்றவர்கள் உள்ளனர்.

ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

August 18th, 01:52 pm

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

Today, the nation is moving forward with the spirit of liberation and rejecting the mentality of slavery: PM Modi

August 12th, 04:42 pm

PM Modi laid the foundation stone and dedicated to the nation, development projects in Sagar, Madhya Pradesh. Addressing the gathering, he said that one can witness the ‘sagar’ (ocean) of harmony in the land of Sagar today with the presence of saints, the blessings of Saint Ravidas and the huge crowd comprising different sections of society. He mentioned that the foundation stone of Sant Shiromani Gurudev Shri Ravidas ji Memorial was laid today to further the shared prosperity of the nation.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

August 12th, 03:30 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.100 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட உள்ள சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.1580 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும் இரண்டு சாலை திட்டங்கள் மற்றும் ரூ.2475 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்ட கோட்டா-பினா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாதோலில் அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 01st, 10:56 pm

இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் திரு மங்குபாய் படேல், முதல்வர் திரு ஷிவ்ராஜ் ஜி, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா ஜி, திரு. ஃபகான் சிங் குலாஸ்தே ஜி, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எங்களை ஆசீர்வதிக்க இங்கு வந்திருக்கும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பங்கேற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

July 01st, 03:29 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார். மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.

மனதின் குரல், 102ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 18.06.2023

June 18th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன். பொதுவாக மனதின் குரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இடம் பெறும், ஆனால், இந்த முறை ஒரு வாரம் முன்னதாகவே நடைபெறுகிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன், அங்கே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பணி இருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; இதைக் கருத்தில் கொண்டு, அங்கே செல்லும் முன்பாகவே ஏன் உங்களிடத்திலே உரையாடக் கூடாது, இதை விடச் சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும் என்று நான் கருதினேன். மக்களின் நல்லாசிகள், நீங்கள் அளிக்கும் உத்வேகம் ஆகியன என்னுடைய சக்தியை மேலும் அதிகரிக்கின்றன.

குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 14th, 12:45 pm

அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் திரு. கேசப் மஹந்தா அவர்களே, உங்கள் அனைவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.

அசாம் மாநிலம் குவாஹத்தியில் ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 14th, 12:30 pm

அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி,நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை வழங்கி ‘உங்கள் வீடு தேடி மருத்துவம்’ இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்

வாரணாசியில் ருத்ரகாஷ் மாநாட்டு மையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 24th, 10:20 am

உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

March 24th, 10:15 am

வாரணாசியில் ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். காசநோய் இல்லாத பஞ்சாயத்து, இந்தியா முழுவதும் காசநோய்க்கான தடுப்பு சிகிச்சை, குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சை ஆகியவற்றை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023-யும் வெளியிட்டார். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் மற்றும் உயர் தடுப்பு ஆய்வகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய அவர், வாரணாசியில் பொது சுகாதார கண்காணிப்பு அலகையும் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பில் முன்னேற்றத்தைக் கண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் புல்வாமா, அனந்தநாக் ஆகிய மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.

பிரதமர் ஏப்ரல்24-ம் தேதி வாரணாசி செல்கிறார்

March 22nd, 04:07 pm

பிரதமர் திரு ரேந்திர மோடி ஏப்ரல் 24 அன்று வாரணாசி செல்லவுள்ளார். காலை 10.30 மணிக்கு ருத்ரகாஷ் மாநாட்டு அமையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார். நண்பகல் 12 மணிக்கு சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் ரூ.1780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.