பிரதமர் இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு புதுமையான வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்முயற்சிகளின் தொடக்க விழாவில் உரையாடியதன் மொழிபெயர்ப்பு
November 12th, 11:01 am
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்திகாந்த தாஸ், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற முக்கியஸ்தர்கள், மரியாதைக்குரிய ஆண்கள் மற்றும் பெண்களே! உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். கொரோனாவின் இந்த சவாலான காலகட்டத்தில் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மிகவும் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளன. இந்த அமிர்த மஹோத்சவ் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான தசாப்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், ரிசர்வ் வங்கிக்கு முக்கியப் பங்கு உள்ளது. RBI குழு நாட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்.இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
November 12th, 11:00 am
இந்திய ரிசர்வ் வங்கியின், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய இரண்டு புதிய கண்டுபிடிப்பு முன்முயற்சிகளை, அதாவது நேரடி சிறு முதலீட்டுத் திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒருங்கினைக்கப்பட்ட குறைதீர்ப்புத் திட்டம் ஆகியவற்றை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.