ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 13th, 11:19 pm

இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க! என்று சொல்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமரின் கலந்துரையாடல்

February 13th, 08:30 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வணக்கம் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் 7 அமீரகங்கள் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினரும், அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர்.

ஜி 20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய வீடியோ உரையின் தமிழாக்கம்

June 21st, 03:00 pm

மேன்மைதாங்கியவர்களே, தாய்மார்களே மற்றும் மதிப்பிற்குரியவர்களே, வணக்கம்!

“சுற்றுலாத்துறையில் இந்தியாவின் அணுகுமுறை பழங்கால சமஸ்கிருத வார்த்தையான அதிதி தேவோ பவா என்ற விருந்தினரே கடவுள் என்பதையே அடிப்படையாகக் கொண்டது”

June 21st, 02:29 pm

ஜி20 நாடுகளில் சுற்றுலா அமைச்சர்களின் கூட்டம் கோவாவில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது சுற்றுலாத்துறையில் உலகளவில் இரண்டு டிரில்லியன் டாலருக்கும் மேல் கையாண்டுக் கொண்டிருந்தாலும், சுற்றுலா அமைச்சர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் என்பதற்காக மட்டும் கோவாவில் ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், அமைச்சர்கள் இங்கு நடத்தப்படும் ஆலோசனைகளுக்கு இடையே கோவாவின் இயற்கை அழகையும், ஆன்மிக பயணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுதில்லியில் சர்வதேச சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 18th, 02:43 pm

சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நலனுக்கு மட்டுமல்லாமல் உலக நலனில் இந்தியாவின் பொறுப்பின் அடையாளமாக திகழ்கிறது.

உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 18th, 11:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

March 02nd, 09:38 am

மேன்மை தங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர்களே, சர்வதேச அமைப்புகளின் தலைவர்களே,

ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் உரை

March 02nd, 09:37 am

ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி செய்தியை வழங்கினார்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் தமிழாக்கம்

February 24th, 09:25 am

ஜி20 கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு எனது கனிவான வணக்கம். இந்தக் கூட்டம் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான முதல் பேச்சுவார்த்தையைக் குறிக்கும் விதமாக அமைகின்றது. இந்தக் கூட்டம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு நான் எனது நல்வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில், நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் நான் அறிவேன். உலகளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், நீங்கள் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரத்திற்கு நூறாண்டுகளுக்கு ஒருமுறை மிகப் பெரிய பின்னடைவை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் அதன் தாக்கத்திலிருந்து தற்போது வரையில் மீள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவி - பொருளாதார பிரச்சனைகள் நிலவி வருவதையும் நாம் உணர்ந்து வருகிறோம். உலக விநியோகத் தொடர் சங்கிலியில் பல இடையூறுகள் உள்ளன. விலைவாசி உயர்வின் காரணமாக பல்வேறு சமூக அமைப்புகள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. நிலையற்ற கடன்களின் விளைவாக பல்வேறு நாடுகள் தனது நிதி ஆதாரங்களில் கேள்விக்குறி ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. ஏனெனில் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிகுந்த மெத்தனப் போக்கு நிலவுகிறது. தற்போது தங்களால் மட்டுமே உலகளவில் முக்கியப் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, நம்பிக்கை, வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்த முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் பிரதமர் உரை

February 24th, 09:15 am

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது செய்தியை பகிர்ந்து கொண்டார்.

Our G-20 mantra is - One Earth, One Family, One Future: PM Modi

November 08th, 07:31 pm

PM Modi unveiled the logo, theme and website of India’s G-20 Presidency. Remarking that the G-20 logo is not just any logo, the PM said that it is a message, a feeling that runs in India’s veins. He said, “It is a resolve that has been omnipresent in our thoughts through ‘Vasudhaiva Kutumbakam’. He further added that the thought of universal brotherhood is being reflected via the G-20 logo.

ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்

November 08th, 04:29 pm

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் என்றும், இது நாட்டுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் நான் கூறி வந்தேன் என்றார்.