The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.PM Modi addresses the Parliament of Guyana
November 21st, 07:50 pm
PM Modi addressed the National Assembly of Guyana, highlighting the historical ties and shared democratic ethos between the two nations. He thanked Guyana for its highest honor and emphasized India's 'Humanity First' approach, amplifying the Global South's voice and fostering global friendships.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
June 19th, 10:31 am
மூன்றாவது முறையாக பதவியேற்ற முதல் 10 நாட்களுக்குள், நாளந்தாவுக்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது உண்மையில் எனக்கு கிடைத்த நல்வாய்ப்பு. பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாக இதைப் பார்க்கிறேன். நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. நாளந்தா என்பது ஒரு அடையாளம், ஒரு மரியாதை. நாளந்தா என்பது ஒரு மதிப்பு, ஒரு மந்திரம், ஒரு பெருமிதம், ஒரு கதை. புத்தகங்கள் நெருப்பில் எரிந்தாலும் அறிவை அணைக்க முடியாது என்ற உண்மையை நாளந்தா வெளிப்படுத்துகிறது. நாளந்தாவின் அழிவு பாரதத்தை இருளால் நிரப்பியது. இப்போது, அதன் மறுசீரமைப்பு பாரதத்தின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
June 19th, 10:30 am
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும்: பிரதமர்
September 08th, 04:41 pm
புதுதில்லி ஜி20 உச்சிமாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை
August 18th, 02:15 pm
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்தியாவிற்கும், எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். உங்களை வரவேற்பதில் என்னுடன் 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மற்றவர்கள் உள்ளனர்.ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 18th, 01:52 pm
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
August 15th, 02:14 pm
எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இப்போது மக்கள் தொகையின் கண்ணோட்டத்தில் கூட நாம் நம்பிக்கையில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பலர் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, 140 கோடி நாட்டு மக்கள், எனது சகோதர சகோதரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்று சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவை நேசிக்கும், இந்தியாவை மதிக்கும், இந்தியாவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் இந்த மாபெரும் சுதந்திரத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.India Celebrates 77th Independence Day
August 15th, 09:46 am
On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 23rd, 08:54 pm
ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!சிட்னி, ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
May 23rd, 01:30 pm
சிட்னியின் குடோஸ் பேங்க் அரினாவில் 2023, மே 23 அன்று பெருந்திரளாகக் கூடியிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி, கலந்துரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மேன்மைதங்கிய திரு அந்தோணி அல்பானிஸ் உடனிருந்தார்.ஜி7 உச்சிமாநாட்டின் 6-வது பணி அமர்வில் பிரதமர் நிகழ்த்திய தொடக்க உரையின் தமிழ் மொழியாக்கம்
May 20th, 04:53 pm
முதலாவதாக ஜி7 உச்சிமாநாட்டுக்கு வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ள ஜப்பான் பிரதமர் மேன்மைதங்கிய கிஷிடாவுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பு குறித்து இந்த அமைப்பில் நான் சில ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை
April 26th, 03:40 pm
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அனைவரும் நோயற்று இருக்கட்டும். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும். துன்பத்தால் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்பது இந்தியாவின் வேதவாக்காக உள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகளவில் பெருந்தொற்றுகள் இல்லாத காலத்தில் சுகாதாரத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை அனைவருக்கும் பொருத்தமாக இருந்துள்ளது. இன்று நாம் கூறுகின்ற ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பது செயல்பாட்டில் ஒரே மாதிரியான சிந்தனையாகும். மேலும் எங்களின் தொலைநோக்குப்பார்வை மனித குலத்திற்கு மட்டுமானது அல்ல. தாவரங்களில் இருந்து விலங்குகள் வரையும், நிலத்தில் இருந்து நதிகள் வரையும் நம்மை சுற்றியுள்ள அனைத்தும் சுகாதாரத்துடன் இருக்கும் போதுதான் நாமும் சுகாதாரமாக இருக்க முடியும் என்ற ஒட்டுமொத்த சூழலையும் இது உள்ளடக்கியதாகும்.ஒரே பூமி ஒரே சுகாதாரம் – மேன்மையான சுகாதார கவனிப்பு இந்தியா 2023 நிகழ்வில் பிரதமரின் உரை
April 26th, 03:39 pm
மேன்மை தங்கியவர்களே, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களே, மேற்காசியா, சார்க், ஆசியான், ஆப்பிரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த சிறப்புமிகு பிரதிநிதிகளே, உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன். எனது அமைச்சரவை சகாக்களுக்கும், இந்திய சுகாதார தொழில்துறையின் பிரதிநிதிகளுக்கும் வணக்கம்!ஜனநாயகத்துக்கான 2-வது உச்சி மாநாட்டின் தொடக்கத்திற்கு முந்தைய, தலைவர்கள் நிலையிலான நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரை
March 29th, 04:06 pm
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் என்ற தத்துவம் உலகின் பிற பகுதிகளுக்கு முன்பாகவே பழங்கால இந்தியாவின் பொதுவான அம்சமாக இருந்துள்ளது. நமது பழங்கால இதிகாசமான மகாபாரதத்தில், மக்களின் முதல் கடமை தங்களது தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்று விவரிக்கப்பட்டுள்ளது.வாரணாசியில் ருத்ரகாஷ் மாநாட்டு மையத்தில் ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 24th, 10:20 am
உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பாதக் அவர்களே, பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்களே, உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் அவர்களே, அனைத்து பிரதிநிதிகளே, ஸ்டாப் டிபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளே, மகளிரிரே மற்றும் பண்பாளரே!உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஒரே உலகம் காசநோய் உச்சிமாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 24th, 10:15 am
வாரணாசியில் ருத்ராட்ச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரே உலகம் காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். காசநோய் இல்லாத பஞ்சாயத்து, இந்தியா முழுவதும் காசநோய்க்கான தடுப்பு சிகிச்சை, குடும்பம் சார்ந்த மாதிரி சிகிச்சை ஆகியவற்றை தொடங்கி வைத்த அவர், இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023-யும் வெளியிட்டார். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் மற்றும் உயர் தடுப்பு ஆய்வகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய அவர், வாரணாசியில் பொது சுகாதார கண்காணிப்பு அலகையும் தொடங்கி வைத்தார். காசநோய் ஒழிப்பில் முன்னேற்றத்தைக் கண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் புல்வாமா, அனந்தநாக் ஆகிய மாவட்டங்கள் இந்த விருதைப் பெற்றன.