டாக்டர் ஹரே கிருஷ்ணா மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்தி பதிப்பு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை
April 09th, 12:18 pm
மக்களவை உறுப்பினர் மட்டுமல்லாமல் ஓர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமது கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாகவும் விளங்கும் என்னுடன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள திரு பர்த்ருஹாரி மஹ்தப் அவர்களே, திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, மகளிரே, ஆடவர்களே! ‘உத்கல் கேசரி’ ஹரே கிருஷ்ணா மஹ்தப் அவர்களுடன் சம்பந்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்திப் பதிப்பை பிரதமர் வெளியிட்டார்
April 09th, 12:17 pm
'உத்கல் கேசரி' டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் எழுதிய 'ஒடிசா இதிகாசத்தின்' இந்தி மொழிப்பெயர்ப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.டாக்டர்.ஹரேகிருஷ்ண மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்தி பதிப்பு: பிரதமர் ஏப்ரல் 9ம் தேதி வெளியிடுகிறார்
April 07th, 01:56 pm
‘உத்கல் கேசரி’ டாக்டர்.ஹரேகிருஷ்ண மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்தி பதிப்பை, புதுதில்லி, ஜன்பத், அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இம்மாதம் (2021 ஏப்ரல்) 9ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடுகிறார். இந்தப் புத்தகம், இதுவரை ஒடியாவிலும், ஆங்கிலத்திலத்திலும் மட்டுமே கிடைத்தது. இதை திரு சங்கர்லால் புரோகித் என்பவர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கட்டாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு பர்த்ருஹரி மஹ்தப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்தி பதிப்பு வெளியிடும் நிகழ்ச்சியை ஹரேகிருஷ்ண மஹ்தப் அறக்கட்டளை நடத்துகிறது.