என்எக்ஸ்டி  மாநாட்டில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார்

என்எக்ஸ்டி மாநாட்டில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார்

March 01st, 04:07 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லி பாரத மண்டபத்தில் உள்ள என்எக்ஸ்டி மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடினார். இந்தப் பிரமுகர்கள் பட்டியலில் திரு. கார்லோஸ் மான்டெஸ், பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங், டாக்டர் ஆன் லிபர்ட், பேராசிரியர். வெசெலின் போபோவ்ஸ்கி, டாக்டர் பிரையன் கிரீன், திரு. அலெக் ரோஸ், திரு. ஒலெக் ஆர்டெமியேவ், திரு. மைக் மாசிமினோ ஆகியோர் அடங்குவர்.

இலங்கையின் முன்னாள் அதிபரை பிரதமர் சந்தித்தார்

இலங்கையின் முன்னாள் அதிபரை பிரதமர் சந்தித்தார்

March 01st, 02:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி , இலங்கையின் முன்னாள் அதிபர் திரு. ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் சந்தித்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர், பிரதமருடன் சந்திப்பு

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர், பிரதமருடன் சந்திப்பு

March 01st, 02:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் என்எக்ஸ்டி மாநாட்டில் இன்று (01.03.2025) முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் திரு டோனி அபாட்டைச் சந்தித்தார்.

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 11:00 am

ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

March 01st, 10:34 am

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.