திரு ஆச்சாரியா வினோபா பாவேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
September 11th, 11:06 pm
திரு ஆச்சாரியா வினோபா பாவேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை
July 25th, 01:00 pm
உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு. பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும் விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது. இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.ஜிஎஸ்டி நாட்டின் வலிமையை எடுத்துரைக்கிறது : மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி
July 30th, 11:01 am
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டியை நாட்டிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி நல்ல மாற்றத்தை கொண்டு வரும் ‘குட் அண்ட் சிம்பிள் டேக்ஸ்’ என கூறினார். ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவர் பாராட்டினார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் சுதந்திர போரட்டத்தில் தலைவர்களின் பங்கு ஆகியவை குறித்து பேசினார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கவலை வெளியிட்ட அவர், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும் படி அதிகாரிகளை வலியுறுத்தினார்.