"மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின்" வெற்றிகரமான அமல்படுத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 03rd, 12:15 pm

மத்திய அமைச்சரவையின் எனது நண்பர் திரு. அமித் ஷா அவர்களே, சண்டிகர் நிர்வாகி திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சந்து அவர்களே, ஏனைய பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

December 03rd, 11:47 am

இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி சண்டிகரில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, சண்டிகரின் அடையாளம், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டும் சக்தி வடிவமான அன்னை சண்டி தேவியுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் முழு வடிவத்திற்கும் இதே தத்துவம்தான் அடிப்படை என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் உத்வேகம் பெற்று இந்திய நியாயச் சட்டம் அமலுக்கு வந்திருப்பது, வளர்ச்சியடைந்த இந்தியா உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கட்டத்தில் நாடு உள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நிறைவு செய்ததை நினைவுகூரும் முக்கியமான தருணம் என்று பிரதமர் கூறினார். நாட்டின் மக்களுக்காக நமது அரசியலமைப்பு வகுத்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார். சட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் இப்போதுதான் பார்த்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சட்டங்களின் நேரடி செயல்விளக்கக் காட்சியை பார்வையிடுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் அவர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகத்தின் அனைத்து பங்குதாரர்களையும் அவர் பாராட்டினார்.