பிரதமர் நாளை வாரணாசி பயணம்
October 19th, 05:40 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, மாலை 4:15 மணியளவில், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.பீகார் மாநிலம் பித்தாவில் ரூ 1413 கோடி மதிப்பீட்டில் புதிய சிவில் வளாகம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 16th, 09:27 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பித்தாவில் 1,413 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் புதிய சிவில் பகுதி வளாகம் அமைப்பதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேற்கு வங்க மாநிலம் பாக்ட்கோரா விமான நிலையத்தில் 1549 கோடி ரூபாய் செலவில் பொது மக்கள் சேவைக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
August 16th, 09:22 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள பாக்ட்கோரா விமான நிலையத்தில் 1549 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிவில் என்க்ளேவ் எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.